ஆதிரைக்கு எழுந்து பதில் சொல்ல தெரியாதா? சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி!
பிக்பாஸில் விஜய் சேதுபதி ஆதிரைக்கு ஏன் எழுந்து பதில் சொல்ல தெரியாதா? என கேட்டு வறுத்தெடுத்த காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் -9
கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.
சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
பிக் பாஸ் பிரபல தொலைக்காடயில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இந்த சீனனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார். கடந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முதல் உள்ள 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
அதே போன்று இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் களமிறங்கினார்.அதனை தொடர்ந்து. அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
முதல்வார எவிக்ஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டியிலிருந்து நந்தினி வெளியேறியிருக்கின்றார். தவிர்க்க முடியாத காரணங்கள் போட்டியாளர் நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியிருக்கிறார்.
விஜய் சேதுபதியின் சர்ச்சை பேச்சு
பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வாரம் என்பதால் வீட்டில் தெனாவட்டுடன் அழைந்துக் கொண்டிருந்த போட்டியாளர்களை விஜய் சேதுபதி வறுத்தெடுக்க தொடங்கிவிட்டார்.
இந்த நிலையில் ஒவ்வொருவரையும் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்திக்கொள்ள சொல்லும் போது, சபரி நாதன், விக்ரம் ஆகியோர் எழுந்து நின்று தங்களின் பெயரை சொல்லிவிட்டு அமர்ந்தார்கள்... அதனை தொடர்ந்து ஆதிரை தனது பெயரை அமர்ந்தபடியே சொன்னார்.
[KTRPXUZ
அதனை பார்த்த விஜய் சேதுபதி, ஆதிரைக்கு எழுந்து நிற்பதில் என்ன பிரச்சினை என கேட்டு அவரை சரமாறியாக திட்டிவிட்டார்.குறித்த விடயம் இணையத்தில் பல்வேறு வகையிலும் விமர்சனங்களை பெற்று வருகின்றது.
கமல் இந்த நிகழ்சியை தொகுத்து வழங்கும் போது இப்படி எழுந்து நின்று பதில் சொல்ல வேண்டும் என யாரையும் சொன்னதில்லை... என பலரும் ஆதங்கத்துடன் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |