இவர்களை விட சுனிதா எந்த விதத்தில் குறைந்தவர்? நெட்டிசன்கள் கேள்வி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சுனிதாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ்
பிக் பாஸ் விட்டில் ஆண் பெண் என மொத்தமாக 21 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இதுவரை இந்த போட்டியில் இருந்து 4 பேர் வெளியேறி சென்றுள்ளனர். ஏற்கனவே வீட்டில் இருந்தவர்களின் விளையாட்டு சுவாரஸ்யம் இல்லை என்பதால் 6 வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கினார் பிக்பாஸ்.
ஆனால் அப்போதும் நிகழ்ச்சி ஒரு மாதிரியாகவே போய்கொண்டிருக்கின்றது. வீட்டில் அவ்வப்போது ஏதாவது ஒரு கன்டன்ட் கொடுத்துக்கொண்டு இருந்தவர் தான் சுனிதா. சுனிதாவை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி உள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வாக்குகளே இல்லாமல் இருந்தவர்கள் தான் சாச்சனா மற்றும் ஆனந்தி இவர்களில் ஒருவர் ஏன் வெளியேற்றவில்லை.
ஆனந்தி, சாச்சனாவை விட சுனிதா எதில் குறைந்து போய் விட்டார்? ஆண் போட்டியாளர்களில் இருந்து ஒருவரை வெளியே அனுப்பி இருக்கலாமே என பிக் பாஸிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு வேளை சுனிதா வெளியே சென்று திரும்பவும் வீட்டின் உள்ளே வருவாரா என்ற கேள்வியும் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |