பிக்பாஸில் Ticket to Finale ஜெயிச்சவர் இவரா? டைட்டில் வின்னர் வாய்ப்பு- ஏமாற்றத்தில் Housemates
பிக்பாஸ் 8 Ticket to Finale டாஸ்க்கில் ஆண் போட்டியாளர் ஒருவர் வெற்றிப் பெற்றுள்ளார்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது.
தற்போது பிக்பாஸ் 8ம் சீசன் இறுதி கட்டத்தில் இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் டைட்டில் வின்னர் யார் என்ற அறிவிப்புடன் முடிவுக்கு வரவிருக்கிறது.
Ticket to finale ஜெயித்தவர் யார்?
இந்த நிலையில், இந்த வாரம் விஜய் சேதுபதி மிகுதியாக இருக்கும் போட்டியாளர்களுக்காக டிக்கெட் டு ஃபினாலே பொட்டி வைக்கப்பட்டது. இதற்கான டாஸ்க்குக்கள் கடந்த இரண்டு தினங்களாக பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
டாஸ்க்குகள் அடிப்படையில் பவித்திரா, முத்துகுமரன், ரயான் ஆகியோர் முன்னிலையில் இருந்தார்கள்.
இவர்களில், அடிப்படையில் அதிக புள்ளிகள் பெற்று ரயான் டிக்கெட் டு ஃபினாலே ஜெயித்து இருக்கிறார்.இதன் மூலமாக அவர் பைனலில் முதல் ஆளாக நுழைந்து இருக்கிறார்.
இதற்கு முந்தைய சீசன்களில் Ticket to finale ஜெயித்தவர்கள் யாரும் டைட்டில் வென்றது இல்லை. மாறாக முகின் ராவ் மாத்திரம் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |