இனி இந்த Ghibli வேண்டாம்... காரணத்துடன் பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் வெளியிட்ட அதிரடி பதிவு!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இன் டைட்டில் வின்னர் முத்துக் குமரன் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் இனி இந்த Ghibli வேண்டாமே என பதிவிட்டு Ghibli art ஒரு அறிவு திருட்டு என குறிப்பிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
பிக்பாஸ் 8
விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இந்த 8வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார்.
அவருக்கு வெற்றி கோப்பையுடன் ரூ. 40 லட்சத்து ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த முடிவு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் திரும்பும் திசையெல்லாம் கண்ணில் தென்படும் ஜிப்லி பாணியிலான புகைப்படங்கள் குறித்து முத்துக்குமரன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
Ghibli art
ஜப்பானிய பாரம்பரிய கலாச்சாரம், பசுமையான சுற்றுச்சூழல் அம்சங்களை உள்ளடக்கி கையால் வரையப்படும் அனிமேஷன் காட்சியமைப்புதான் ஜிப்லி.
உண்மையில் ஒரு பட்டுச்சேலையை நெசவு செய்வது போல் பல்வேறு நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டது ஜிப்லி. ஆனால் தற்போது தட்டுன வேகத்தில் நம் முன்னே ஜிப்லி பாணியிலான புகைப்படங்களை தந்து விடுகிறது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு அளித்தாலும், இன்னொரு புறம் விமர்சனமும் எழுகிறது.
ஜப்பானில் 1985-ஆம் ஆண்டில் ஹயாவோ மியாசாக்கி (Hayao Miyazaki), இசாவோ தகஹாடா (Isao Takahata) மற்றும் தோஷியோ சுஸுகி (Toshio Suzuki) ஆகியோர் இணைந்து ஜிப்லி ஸ்டுடியோவினை நிறுவினர்.
ஜிப்லி ஸ்டுடியோ, தனக்கென்று ஒரு பிரத்யேக கலைபாணியை கொண்டு அனிமேஷன் படங்களை கையால் வரைந்து அதன் மூலம் கதை சொல்லும் முறையினை அறிமுகப்படுத்தியது. இது மிகவும் கடினமான உழைப்பின் விளைவாகவே பிரபல்யம் ஆகியுள்ளது.
ஒரு பிரத்யேக கலையை ஏஐ மூலம் ஜெனரேட் செய்வது உண்மையிலேயே மியாஸகி சொல்வது போல் ‘கிராண்ட் இன்சல்ட்’ தான். இது ஒரு கலை திருட்டு என பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடி பதிவு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |