பிக்பாஸில் சத்யா, சௌந்தர்யா சர்ச்சை குறித்து பேசிய முன்னாள் போட்டியாளர் மாயா
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் மாயா சொளந்தர்யா பற்றி சத்யா கூறிய சர்ச்சை பற்றி கருத்த தெரிவித்தள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சத்யா, சௌந்தர்யா சர்ச்சை
பிக் பாஸ் 8 வீட்டில் சில நாட்களுக்கு முன்பு சத்யா, விஷால் மற்றும் சௌந்தர்யா இடையேயான பிரச்சனைக்கு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் மாயா கருத்து தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சம்பவம் சௌந்தர்யா பற்றி சத்யா விஷாலிடம் போசிய விஷயமாகும். இது சௌந்தர்யா மற்றும் பார்வையாளர்களை வருத்தமடையச் செய்திருந்தது. அவர்கள் நிகழ்ச்சியில் மரியாதை மற்றும் கண்ணியம் குறித்து கவலை தெரிவித்தனர்.
இதற்கு மாயா கிருஷ்ணன் தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறும் போது 'ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தால் உருவாக்கப்பட்ட மரபுகளின் அடிப்படையில் பெண்கள் எப்படி ஆடை அணிவது, செயல்படுவது மற்றும் உட்காருவது என்று நீண்ட காலமாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்த விதிகள் பெண்களின் சுதந்திரம் மற்றும் சுய வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது, சமூகத்தில் 'ஏற்றுக்கொள்ளக்கூடியதாக' இருக்க கடுமையான தரநிலைகளைப் பின்பற்ற அவர்களைத் தள்ளுகிறது.
இந்த ஆழமான வேரூன்றிய கண்டிஷனிங் காரணமாக, சில பெண்கள் இந்த விதிகள் இயல்பானவை அல்லது தேவை என்று கூட நம்பலாம். இந்த பழைய நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்துவதும் மாற்றுவதும் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவது முக்கியம்.
பெண்களுக்கு எப்படி 'உட்கார வேண்டும்' அல்லது அவர்களைப் பாதுகாக்க நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல ஆண்களுக்கு உரிமை இல்லை. ஆண்களிடமிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. அவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யாதீர்கள்.
ஒரு பெண் உட்காரும் விதம் ஆண்கள் மோசமாக நடந்துகொள்வதற்கு ஒரு காரணமல்ல'. என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
மாயாவின் இந்த கருத்து அனைத்து மக்களாலும் ஏற்க்கப்பட்டது. இதற்கு பலர் ஆதரவான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் இது பெண் சுதந்திரத்தை பாதுகாக்கும் விஷயமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |