அன்ஷிதா 4 மாத கர்ப்பமா? ரயான் கேட்ட கேள்விக்கு அதிரடி Reply.. கொதிப்பில் ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் அன்ஷிதா மற்றும் ராயன் பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும், 'குக் வித் கோமாளி' மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
வாரத்தில் ஐந்து நாட்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியை மிஸ் பண்ணும் ரசிகர்கள் கூட, போட்டியாளர்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி.. அவர்களை வறுத்தெடுக்க தொகுப்பாளரை காண சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வந்து விடுவார்கள்.
கடந்த ஏழு சீசன்களாக, பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை ஃப்ரை செய்து வந்த கமலஹாசன், எட்டாவது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது அவருக்கு பதிலாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.
அன்ஷிதா கர்ப்பமா?
இந்த நிலையில், கமல்ஹாசனை காப்பி செய்யாத விதத்தில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தனி சிறப்பு எனலாம். அதேபோல் தனக்கே உரிய பாணியில் போட்டியாளர்களை விசாரிக்கிறார்.
இவர் போட்டியாளர்களிடம் கேட்கும் கேள்விகள், ரசிகர்கள் தரப்பில் கேட்க வேண்டும் என நினைக்கும் கேள்விகளாக உள்ளதால், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருவதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் அன்ஷிதா தனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும் என வயிற்றை காட்டி ரயானிடம் கேட்டதற்கு, அவர் கிண்டலாக வயிற்றில் என்ன பாப்பா இருக்கிறதா? என கேட்கிறார்.
அதற்கு அன்ஷிதாவும் “ஆமாம் மூன்று மாதம்” என கூற, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து தானா என கேட்கிறார். பின்னர் “நான்கு மாத பேபி..” எனக் அன்ஷிதா கிண்டலாக கூறுகிறார்.
இந்த விடயம் நகைச்சுவைக்கா கூறப்பட்டது என்றாலும், குறித்த காணொளியை பார்த்த ரசிகர்கள் அன்ஷிதாவின் கர்ப்பம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |