எதிர்பார்க்காத நேரம் அக்ஷயாவை தாக்கிய விஷ்ணு.. இவருக்கு கண்டிப்பாக Red card தான்!
எதிர்பார்க்காத நேரம் அக்ஷயாவை தாக்கிய விஷ்ணுவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரை மற்றும் அனன்யா வெளியேறியுள்ளனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
Red card வாங்க காத்திருக்கும் போட்டியாளர்
இந்த நிலையில் வயிலட் கார்ட் என்றியாக 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் வரவிருக்கிறார்கள் என கமல் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இதற்காக பிக்பாஸ் ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இப்படியொரு நிலையில் நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் விஷ்ணு தன்னிலை மறந்து ஐசுவிற்கு பதிலாக அக்ஷயாவை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் பிக்பாஸ் வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்கள் மத்தியில் பயங்கரமாக வெடித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அக்ஷயாவும் விஷ்ணுவிற்கு தர்ம அடி டாஸ்க்கில் கொடுத்துள்ளார்.
ஆனால் விஷ்ணு பெண் போட்டியாளரை தாக்கியதால் இவருக்கு Red card கொடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |