இந்த வாரம் புல்லிங் குரூப்பை உடைக்கும் கமல்.. சூனியக்காரி மாயாவால் உறுப்பினருக்கு வந்த வினை!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 7
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு பரபரப்பாகச் சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வாரம் தோறும் நாமினேஷனில் சிக்கி மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்படுகின்றார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்பட்ட மாயா மற்றும் அக்ஷயா இவர்களை தொடர்ந்து அர்ச்சனா, விசித்ரா, மணி, ரவீனா, பிராவோ, பூர்ணிமா உள்ளிட்ட எட்டு பேர் நாமினேஷனில் உள்ளனர்.
இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்
இந்த நிலையில் அர்ச்சனா மற்றும் விசித்ராவிற்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் இவர்கள்தான் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து மணி, ரவீனாவை விட கடைசி மூன்று இடங்களில் பிராவோ, அக்ஷயா மற்றும் பூர்ணிமா இருப்பதாக கூறப்படுகிறது. குறைவான வாக்குகள் பெற்று இந்த வாரம் பூர்ணிமா வெளியில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்ற போட்டியாளர்களை விட ஆக்டிவாக இருந்தாலும் மாயாவுடன் சேர்ந்து கொண்டு செய்த பல விஷயங்கள் மக்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தியது.
எனவே புல்லிங் குரூப்பை பிரிக்க வேண்டும் என ரசிகர்கள் திட்டம் போட்டுள்ளார்கள் என தெளிவாக தெரிய வந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |