பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்! வெளியேறப்போவது இவர்கள் தான்..டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 7 பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக திகழ்ந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் மற்றும் யார் டைட்டில் வின்னர் என்பது குறித்த தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
பிக்பாஸ்
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களை காட்டிலும் இந்த சீசன் தான் அதிகளவிலான சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
படிப்பு விஷயத்தில் ஜோவிகா - விசித்ரா இடையே நடந்த மோதல் முதல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது வரை எக்கச்சக்கமான சம்பவங்கள் நடந்துள்ளன.
இப்படி பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக விளங்கி வரும் இது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை சுற்றி எதிர்மறையான கருத்துகள் நிலவியது என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் மீதே பலருக்கு வன்மமான கருத்துகள் எழுந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி, 95 நாட்களை தாண்டியுள்ள நிலையில், இன்னும் இந்த இல்லத்தில் 7 பேர் உள்ளனர். ஆனால் இறுதிப்போட்டியில் மேடையை பகிர்ந்து காெள்ளபோவது இரண்டு பேர்தான் என்பதால் இப்போட்டியின் கடைசி வாரமான இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இடம்பெறும்.
இந்த நிலையில், அந்த எவிக்ஷனில் சிக்க இருக்கும் இரண்டு பேர் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் பாேட்டியாளர் விஷ்ணு, நேரடியாக இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை பெற்று விட்டார். அதனால், இந்த வாரம் இவர் மட்டும் எவிக்ஷன் லிஸ்டில் இல்லை.
இவரைத்தவிர பிற போட்டியார்களான விசித்ரா, மாயா, அர்ச்சனா, தினேஷ், மணிச்சந்திரா, விஜய் வர்மா உள்ளிட்டோர் இன்னும் போட்டியார்களாக உள்ளனர். இவர்களுள் விஜய் வர்மா வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் போட்டிக்குள் நுழைந்தார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் ஆக்டிவாக இருந்த இவருக்கு அதன் பிறகு கேமரா டைமே கிடைக்கவில்லை. அதனால் மக்கள் இவருக்கு வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆகையால், எவிக்ட் ஆக இருக்கும் இருவரில் விஜய் வர்மாவும் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, மணிச்சந்திராவும் குறைவாக வாக்குகளை பெற்றுள்ளாராம்.
ஆகையால், இவர்கள் இருவருமே தற்போது டேஞ்சர் லிஸ்டில் உள்ளனர். இப்போட்டியின் முக்கிய போட்டியாளரான மாயா மீதும் வெகு நாட்களாகவே பலருக்கு வெறுப்பு எழுந்துள்ளது. “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்பது போல, மாயாவும் இந்த வாரம் வெளியேற வாய்ப்பிருக்கிறது.
டைட்டில் வின்னர் யார்?
பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமன்றி, இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களும் கூட டைட்டில் வின்னர் யார் என்பது குறித்துதான் பேசி வருகின்றனர். அப்படி பேசுபவர்கள் அனைவரும் கூறும் ஒரே பெயர், அர்ச்சனா என்றுதான் உள்ளது. இவர், பிக்பாஸ் ஆரம்பித்த சில நாட்களுக்கு பிறகு வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார்.
வந்த முதல் வாரமே சண்டை-சச்சரவு-அழுகை என இவரை சுற்றியே சில நாட்கள் நிகழ்ச்சி சென்றது. இதன் மூலம் இவருக்கு மக்கள் ஆதரவும் பெருகியது. இதனால் இவர் பிக்பாஸ் 7 வெற்றியாளராக இருப்பார் என கூறப்படுகிறது.
ஆனால், இந்தி பிக்பாஸ் உள்பட இதுவரை நடைபெற்ற சீசன்களில் வைல்ட் கார்டில் நுழைந்த யாருக்கும் டைட்டில் கொடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு போட்டியாளரான மாயா மீது பலருக்கு வெறுப்பு எழுந்தாலும், அதை அடுத்தடுத்த வாரங்களில் இவர் பாசிடிவாக மாற்றினார்.
இவருக்கு ரசிகர்களும் கூடினர். எனவே, மாயாவும் இந்த வாரம் எவிக்ட் ஆகவில்லை என்றால், வெற்றியாளராகலாம் என்றும், அல்லது வெற்றியாளருடன் மேடையை பகிர்ந்து கொள்ளலாம் என்வும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |