சின்ன வீடு பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இந்த பிக் பாஸ் பிரபலமா? வெளியே அவிழ்ந்த ரகசியம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் உள்ள நிலையில், சின்ன வீட்டிற்கு குரல் கொடுக்கும் பிரபலம் யார் என்று தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக சில தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் மட்டும் சின்ன வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரண்டு போட்டியாளர்கள் விதியை மீறி சின்ன வீட்டிலிருந்து வந்தவர்களுக்கு சமையலுக்கு உதவியர்கள் என்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
சின்ன வீடு பிக் பாஸ் குரல் யாருடையது?
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹைலைட் என்றால் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனும், கம்பீர குரலில் ஒலிக்கும் பிக்பாஸும் தான். இந்த குரலுக்கு சொந்தக்காரர் சாஷோ என்பது சில ஆண்டுக்கு முன்பு தான் தெரியவந்தது.
மும்பையில் வசித்து வரும் இவர் நடிகர் மட்டுமின்றி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்து வருகின்றார். தற்போது பிக் பாஸில் சின்ன வீடுக்கு குரல் கொடுக்கும் நபர் யார் என்பது தெரியவந்துள்ளது.
ஆம் பிக் பாஸ் சீசன் 5ல் டைட்டில் வின்னராக வந்த ராஜு என்பது கூறப்பட்டு வருகின்றது. தொடர்ந்து ரசிகர்களின் தேடலும் அதிகமானது.
இந்நிலையில் சின்ன பாஸ் ஆக சின்ன வீட்டிற்குள் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் அரவிந்தன் என்பது தெரியவந்துள்ளது.
சென்னையை சேர்ந்த இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தீவிர முயற்சி செய்துள்ள நிலையில், திரையரங்கு ஆட்டிஸ்ட் ஆன இவர் கூத்து பட்டறையில் பயிற்சி பெற்றதுடன், இன்னும் சில தினங்களில் இவரது முகத்தை வெளியுலகிற்கு காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |