நிக்ஷன் காதலுக்கு End card போட்ட பிக்பாஸ்- ஐசு சூட்கேஸில் கொண்டு செல்லும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நிக்ஷனால் காதல் சர்ச்சையில் சிக்கிய அவமானத்துடன் வெளியேறும் ஐசுவின் சம்பளம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் அன்னபாரதி மற்றும் பிரதீப் ஆகியோர் வெளியேற்றபட்டார்கள்.
ஐசுவின் சம்பள தொகை
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் அனைத்தும் பிக்பாஸ் வீட்டில் மேல் திரும்பியது. இன்றைய தினம் அனைத்து சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் முக்கிய போட்டியாளராக இருந்த ஐசு - நிக்ஷனின் காதல் வலையில் விழுந்து பெறும் சர்ச்சையை கிளப்பி வருகிறார்.
ஐசுவின் பெற்றோரின் கோரிக்கை பிரகாரம் இன்றைய தினம் ஐசு வெளியேற்றப்படுகிறார். இவரின் சம்பளம் விவரங்கள் வெளியாகியுள்ளது.
42 நாட்களை பிக்பாஸ் வீட்டில் கடந்த ஐசு சம்பளமாக 6,30,000 ரூபாய் பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எவிக்ஷனில் பூர்ணிமா வெளியேறுவார் என கூறப்பட்டது.
ஆனால் அவர் இன்னும் ஒரு வாரம் இருப்பார் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |