பிக்பாஸ் வீட்டில் காதல் சர்ச்சையில் சிக்கிய ஐஸு காதலன் யார் தெரியுமா? வைரல் புகைப்படம்!
பிக்பாஸ் வீட்டில் காதல் சர்ச்சையில் சிக்கிய ஐசுவின் உண்மையான காதலன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருப்பது பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது ஏழாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வெளியேறும் போட்டியாளர்கள் மீடியா மற்றும் சினிமாத்துறையில் இலகுவாக பிரபலமாகி விடுகிறார்கள்.
இந்த நிலையில் பிக்பாஸ் 7 மிக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
ஐசுவின் உண்மை காதலன்
அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் ஐசு - நிக்ஸனை காதலித்து வருகிறார்.
இன்றைய தினம் வெளியான சில கிசுகிசுப்புக்கள் காரணமாக பிரேக்அப் செய்து விட்டு அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கின்றார்.
மேலும் காதல் சர்ச்சையில் சிக்கினால் வீட்டிற்குள் எடுக்கமாட்டேன் என ஐசுவின் அம்மா கூறியதால் வீட்டிற்கு எப்படி செல்வேன் என பயத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.
இவருக்கு வெளியில் ஒரு காதலன் இருப்பதாக கூறப்படுகின்றது. கடந்த பிக்பாஸ் சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் நிரூப் தான் ஐசுவின் காதலன் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தி கேட்டு இணையவாசிகள், அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |