நடு வீட்டில் தன்னை தானே அசிங்கபடுத்திக் கொண்ட கூல் சுரேஷ்..கேட்டதும் முகம் சுழித்த பெண் போட்டியாளர்கள்!
கூல் சுரேஷ் அவருடைய பெயரை அசிங்கமாக கூறிய பிக்பாஸ் வீட்டிலுள்ள பெண்களை முகம் சுழிக்க வைத்துள்ளார்.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் அக்டோபர் முதலாம் திகதி மிக பிரமாண்டமாக ஆரம்பமான நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியில் சரியாக 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அதில் கடந்த சீசன்களில் விளையாடிய பிரபலங்களின் நெருங்கிய உறவினர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
ஏற்கனவே மீடியாத்துறையில் பிரபலமானவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புவதால் எந்தவிதமான பயனும் இல்லையென நெட்டிசன்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
முகம் சுழிக்க வைத்த வாதம்
இந்த நிலையில் கடந்த சீசனில் ஜிபி முத்து போல் இந்த சீசனில் கூல் சுரேஷ் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் ஆளாக சென்றுள்ளார்.
இது போன்ற சர்ச்சை நாயகர்களை வீட்டிற்குள் அனுப்பி அங்கிருந்தவர்களுடன் பழக விடும் போது பிக்பாஸ் டிஆர்பி எகிறும் என பிக்பாஸ் நிகழ்ச்சி நினைக்கிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூல் சுரேஷ் தன்னுடைய பெயருக்கு முன்னாள் அனைவரும் “ பூ” என்ற எழுத்தை போட்டு பேசுகிறார்கள் என ஓபனாக பேசியுள்ளார். இந்த வார்த்தையை கேட்டு அங்கிருந்த பெண் போட்டியாளர்கள் முகம் சுழித்துள்ளார்கள்.
பெண்கள் இருக்கும் இடங்களில் ஓபனாக இது போன்ற விடயங்களை பகிர்வதால் அது சமூகத்திற்கு ஏற்றது அல்ல என இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றார்கள்.
ஆனால் பிக்பாஸ் நினைத்ததை கூல் சுரேஷ் அவரின் பாணியில் செய்து வருகிறார் என்பது தெளிவாகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |