இறுதி நொடியில் தப்பிய இலங்கை பெண்! கணிப்பு பலித்தது...வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று இறுதி நேரத்தில் இலங்கை பெண் ஜனனி தப்பிய நிலையில் ரசிகர்களின் கணிப்பு போல குயின்ஸி வெளியேறினார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 55 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் குயின்ஸி வெளியேறி விட்டார் என்ற தகவல் கிடைத்திருந்தது.
தப்பிய இலங்கை பெண்
எனினும், கமலின் ஞாயிற்று கிழமை நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் கடைசி இடங்களில் மைனா, ஜனனி மற்றும் குயின்ஸி இருந்தார்கள்.
நடிகர் கமல் ஹாசன் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளரை அறிவிப்பதற்கு முன்னர் ஒரு விளையாட்டை விளையாடினார்.
வெளியேறிய குயின்ஸி
அதில்,மைனா, ஜனனி,குயின்ஸியின் பெயர் இடம்பெற்ற சூட்கேஸ் பெட்டிகள் இருக்கும் அதில் யாருடைய சாவி பொருந்துகிறதோ அவர்கள் வெளியேற்றப்படுவர்கள் என்று குறிப்பிட்டார்.
முதலில் யாருடையதும் ஓப்பன் ஆக வில்லை.
பிறகு குயின்சியின் சூட்கேஸ் திறக்கப்பட்டதால் அவர் வெளியேற்றப்பட்டார். இறுதி நிமிடத்தில் ஜனனி தப்பியுள்ளார்.