திமிர் பேச்சு பேசியவர் வெளியேற்றப்படுவாரா? கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள் - நாமினேஷனில் ஏற்படபோகும் அதிரடி திருப்பம்
அடுத்த வாரம் மைனா நந்தினியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
பார்வையாளர்களிடமே மைனா நந்தினி நேற்று திமிர் பேச்சு பேசியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை நெருங்கி விட்ட நிலையில் ரசிகர்கள் போட்டியாளர்களிடம் நேரடியாக கேள்வி கேட்டனர்.
மைனாவை கிழித்து தொங்க விடும் ரசிகர்கள்
ரசிகை ஒருவருக்கு மைனா நந்தினி சொன்ன பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரச்சிதா மற்றும் மைனாவிடம் தான் என்னுடைய கேள்வி என முதல் ஆளாக கேட்ட ரசிகை ஒருவர் உங்க பெய்டு ஹாலிடே எப்படி இருக்கு? என முதல் கேள்வியிலேயே இருவரது மூக்கையும் உடைத்து விட்டார்.
பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ரசிகர்களை என்டர்டெயின் செய்யாமல் இருக்கீங்க என ரசிகர் விளாசியுள்ளார்.
இது மைனாவுக்கு உடனடியாக கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உடனே உங்களுக்கு புடிக்கலைன்னா அனுப்பிடுங்க என்று திமிராக மைனா பதில் கொடுத்தார்.
ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் இது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதனால் அடுத்த வாரம் நாமினேஷனில் மைனா இருந்தால் அவரை தான் முதல் ஆளாக வெளியே அனுப்ப வேண்டும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.