ஆரம்பிக்கப்போகும் பிக்பாஸ் 5-ல் கமல் செய்யப்போகும் புதிய மாற்றம்! பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான ப்ரொமோ ஷூட்டிங்கும் சமீபத்தில் தான் நடந்தது.
அதில் கமல்ஹாசனும் ஸ்டைலான உடைகளில் தோன்றினார். இதற்கு முன் வந்த நான்கு சீசன்களிலும் கமல் வாரம்தோறும் செம ஸ்டைலான உடைகளில் தான் வந்து தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதற்காகவே ரசிகர்கள் அதிகம் பாராட்டவும் செய்திருக்கிறார்கள். கடந்த சீசன்களில் காமலுக்காக ஆடை வடிவமைத்த அம்ரிதா ராம் தான் இந்த முறையும் கமலுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கமல் ஐந்தாம் சீசனில் உடுத்தும் ஆடைகள் கதிரில் செய்யப்பட்டதாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.
காதரில் எவ்வளவு ஸ்டைலாக அவருக்கு தகுந்தாற்போல செய்ய முடியுமோ அப்படி தேர்ந்தெடுத்து செய்திருப்பதாக அவர் கூறி உள்ளார். கடந்த சிசனில் கமல் கதர் ஆடைகளுக்காக தனது சொந்த பிராண்டை அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிக்பாஸ் 5 ஆக்டோபர் மாதம் துவக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ப்ரோமோ வீடியோ இந்த வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.