இலங்கை பெண்ணிடம் முதல் நாளே தொகுப்பாளினி பிரியங்கா வைத்த கோரிக்கை! இது தமிழ் பிக் பாஸ் தானா?
பிக் பாஸ் 5ல் இன்று முதல் நாள், அதனால் போட்டியாளர்கள் பேசி பேசி மற்றவர்களுடன் பழக தொடங்கி இருக்கின்றனர்.
அதனால் மொத்த முதல் நாள் எபிசோடும் ஜாலி மூடில் தான் இருந்தது.
இந்த சீசனில் பல போட்டியாளர்கள் வெளிநாட்டில் இருந்து வந்த மாடல் பெண்கள் என்பதால் பலருக்கும் தமிழ் சரிவர தெரியவில்லை.
ஜெர்மனியில் இருந்து வந்திருக்கும் மதுமிதாவிடம் பிரியங்கா பேசுகிறார்.

தனக்கு இலங்கை தமிழ் ஸ்லாங் அதிகம் பிடிக்கும் என கூறுகிறார். அதனால் அதே போல என்னிடம் பேசுங்க எனவும் கேட்கிறார்.
பிறகு பிரியங்காவை ராஜு கேங் silverback கொரில்லா உடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். பாத்ரூம் கிளீனிங் பற்றி பிரியங்கா வந்து க்ளீனிங் டீமிடம் வந்து சொல்கிறார். பாத்ரூம் கழுவும் டீமுக்கு ராஜூ தான் கேப்டன். அவரிடம் அந்த புகார் செல்கிறது. அது தண்ணீரா, பயன்படுத்திவர்கள் அப்படி செய்து விட்டு போகிவிட்டார்களா என புகார் சொல்கிறார் அவர்.
ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க என பிரியங்கா சொல்ல முடிந்தவரை செய்கிறோம் என வாக்குறுதி கொடுக்கிறார் ராஜு. அதன் பின் பிரியங்கா 'என்னை பற்றி நீங்க என்ன பேசிட்டு இருந்தீங்கனு தெரியணும். அதை பார்க்க நான் வெளியில் எலிமினேட் ஆகி தான் போகணும்' என கேட்கிறார். ராஜு தான் பேசியதை சொல்லிவிடுகிறார்.
"சில்வர்பேக் பற்றி தெரியுமா, நீங்கள் அப்படி தான்" என சொல்கிறார் அபினை வட்டி. "அது ஒரு கொரில்லா, கூட்டத்துக்கு எப்போதும் தலைவராக இருக்கும், நீங்கள் அப்படி தான் என அவன் சொன்னான்" என ராஜூவை கைகாட்டிவிட்டுவிடுகிறார். "என்னை கொரில்லா என சொல்றானா அவன்" என கேட்டுவிட்டு, சற்று நேரம் கழித்து கொரில்லா போலவே நடித்து காட்டிவிட்டு அங்கிருந்து போகிறார்.