அடுத்தடுத்த அதிரடி ட்விஸ்ட்! பாவம் சஞ்சீவ்....பவரால் தப்பிய நிரூப்க்கு நேர்ந்த கதி
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
64 வது நாளான இன்று சுத்தி சுத்தி வந்தீங்க கேட்ன்சி டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் கடுமையாக கடைசி வரை போராடி அமீர் நாற்காலியை கைப்பற்றினார் . அக்ஷரா கெஞ்சிக் கேட்டும் அவர் விட்டு தர மறுத்தார்.
கடைசியாக இந்த வார கேப்டன்சி டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமீருக்கு பிக்பாஸ் வாழ்த்தும் தெரிவித்தார்.
பத்தாவது வாரத்துடன் காயினுக்கான பவர் முடிந்து விடும் என்பதால், தன்னிடம் உள்ள காயின் பவரை பயன்படுத்துவதாக சொல்கிறார் கூறி பாவனி அமீரின் தலைவர் பதவியை தட்டி பறிக்கிறார்.
வெற்றி பெற்றதும் முதல் ஆளாக வந்து வாழ்த்திய பாவனி, இப்படி செய்து விட்டாரே என சற்றே அதிர்ச்சியானார் நடன இயக்குனர் அமீர்.
இதைத் தொடர்ந்து காயின் பவரை பயன்படுத்தியதற்கு தண்டனையாக வீட்டில் உள்ள பெண்களின் உதவியாளராக இருக்க வேண்டும் என பாவனிக்கு உத்தரவிட்டார் பிக்பாஸ்.
இதை வைத்து பாவனியை கிண்டல் செய்கிறார் அக்ஷரா. இதனால் டென்ஷன் ஆகும் பாவனி, உங்களுக்கு உதவியாளராக தான் இருக்க சொல்லி இருக்கார்.
அதற்காக உங்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலையை என்னிடம் சுமத்தாதீர்கள் என சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இந்த வார நாமினேஷன் ப்ராசசில் அபினய், சிபி, நிரூப், அக்ஷரா, இமான் அண்ணாச்சி, தாமரை ஆகியோர் நாமினேட் செய்யப்படுகிறார்கள்.
உங்களிடம் உள்ள காயினை பயன்படுத்தி நாமினேஷனில் இருந்து தப்பிக்க விரும்புகிறீர்களா என நிரூப்பிடம் கேட்கிறார் பிக்பாஸ்.
தனது காயின் பவரை பயன்படுத்துவதாகவும், தனக்கு பதில் சஞ்சீவை நாமினேட் செய்வதாக சொல்கிறார் நிரூப்.
அப்படியானால் உங்களுக்கும் சஞ்சீவிற்கும் ஒரு போட்டி நடத்தப்படும். அதில் நீங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் உங்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும்.
இந்த போட்டி பற்றி விரைவில் தெரிவிக்கப்படும் என்கிறார் பிக்பாஸ்.
சதி செய்த நிவூப்புக்கு விதி விளையாடுவது போல டாஸ்க்கில் சஞ்சிவ் தான் வெற்றி பெற்றார். அதனால் நிரூப் மீண்டும் நாமினேட் செய்யப்பட்டார்.