சுருதி அதிரடி...வந்ததும் வராததுமாக வெடித்த சர்ச்சை? உண்மையை மறைத்தாரா பாவனி
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இறுதி கட்டத்தை நெறுங்கி விட்டது.
வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பிரம்மாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற விருக்கிறது.
கமல் இந்த சீசனில் அடிக்கடி சொல்வது போல எதிர்பாராததை எதிர்பார்க்க நேரிடுமோ என்கிற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் என்பதால் இதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் விருந்தாளிகளாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வண்ணம் உள்ளனர். அதன்படி, பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று ஸ்ருதி, நாடியா சாங் உள்ளே வந்துள்ளனர்.
உள்ளே வந்த சுருதி பாவனி என்னை விட உனக்கு இசை மற்றும் மதுமிதாவை தான் பிடிக்கும்னு சொன்னீயா? என கேள்வி கேட்டு அவரை லாக் செய்து விட்டார்.

முதல் நாள் தான் உனக்காக நான் போன் பண்ணி பேசினேன்.. பாவனிக்கு போன் பண்ணி பேசின சுருதியை அவ்வளவாக பிடிக்காது என்றும் இசை மற்றும் மதுவை தான் பாவனிக்கு பிடிக்கும் என சொன்னியா? என சுருதி கேட்க அப்படியெல்லாம் சொல்லல என மழுப்பி விட்டார் பாவனி.
சுருதியை சாந்தப்படுத்த அதெல்லாம் இல்லைப்பா.. உன்னைத் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கட்டிப்பிடி வைத்தியம் செய்து சமாதானப்படுத்தி விட்டார் பாவனி.

இலங்கை பெண் மதுவை வைத்து வந்த சண்டை அப்படியே ஓய்ந்த நிலையில், ஒரு வேளை போன் காலில் சுருதி பாவனிக்கு அட்வைஸ் சொல்ற மாதிரி பேசுனதால பாவனி அப்படி சொல்லி இருப்பாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.