கதறி அழுத பிரியங்கா... நிரூப் கொடுத்த விலையுயர்ந்த தங்க ப்ரேஸ்லட்! ஏன் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் எந்த டாஸ்க் வந்தாலும் நிரூப்,பிரியங்கா இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக அடித்து கொள்ளுவார்கள்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் நாட்கள் நெருங்க நெருங்க இருவரும் நெருக்கமாகி வருகின்றனர்.
நேற்றைய எபிசோடில் வீட்டில் நீங்கள் விரும்பும் நபருக்கு அன்பு பரிசளிக்க வேண்டும் என்று பிக் பாஸ் கூறினார்.
இதையடுத்து, நிரூப் பிரியங்காவுக்கு அன்பு பரிசு ஒன்றை அளித்தார்.

அதை திறந்து பார்த்த பிரியங்கா கண்கலங்கினார்.
அப்போது பேசிய நிரூப், என் அம்மா எனக்கு கொடுத்தது, இதை என்னைவிட நீ பத்திரா வைச்சிப்பே என்பதால், நான் இதை உனக்கு கொடுக்கிறேன் என்று கையில் அணிந்திருந்த தங்க ப்ரேஸ்லட்டை பரிசாக அளித்தார்.
இதை சற்றும் எதிர்பாராதா பிரியங்கா கண் கலங்கி நிரூப்பை கட்டி அணைத்துக் கொண்டார்.