அனைவர் முன்பும் எமோஷ்னலான அமீர்! பாவனி எனக்கு கிடைத்த பொக்கிஷம்… வெளிவந்த உண்மைகள்
விஜய் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
அமீர், ராஜு,நிரூப், பிரியங்கா,பாவனி ஆகிய 5 போட்டியாளர்கள் டாப் போட்டியாளர்களாக உள்ளனர்.
இதில் டைட்டில் வின்னர் பட்டத்தை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 5நிகழ்ச்சியில் இன்று அனைத்து போட்டியாளர்களும் ஒரு நாள் பிக்பாஸாக மாறினர்.
பிக்பாஸ் உங்களை ஆட்கொள்வார். அப்படி ஆட்கொள்ளப்படும் நபர் பிக்பாசாக மாறி செயல்பட வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
பிக் பாஸாக மாறிய நிரூப், பிக் பாஸ் வீட்டில் மறக்கமுடியாத நினைவுகளை கூறும்படி கூறினார். முதல் ஆளாக வந்த அமீர், கடந்து வந்த பாதையில் என் கதையை சொன்னது என்னால மறக்கவே முடியாது, வெளியில் இதுவரைக்கும் நான் யார்கிட்டயும் இதை சொன்னது இல்லை அந்த நேரம் மிகவும் எமோஷனலா இருந்தது. அதை என்னால் என்றும் மறக்கவே முடியாது.
மேலும்,இந்த வீட்டில் எனக்கு கிடைத்து இருக்கும் நண்பர்கள் குறிப்பா இந்த லூசு என பாவனியை கை தாட்டி எனக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்று அனைவர் முன்பும் கூறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வெளியில் சென்ற பிறகும் இவர்களின் நட்பு தொடருமா என்று பார்க்கலாம்.