சுடுகாட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் யாருடைய ஆதரவும் இல்லாமல் அழைந்த அமீர்! கதற வைத்த சோகம்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிய இன்னும் 4 வாரங்களே உள்ளது.
அமீர் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து கண்ணீருடன் கூறினார்.
நான் இதுவரை என் அப்பாவை பார்த்ததே இல்லை, நான் ஒரு வயதாக இருக்கும் போதே அவர் இறந்து விட்டார்.
நான், என் அம்மா, என் அண்ணன் மட்டும் தான். டான்ஸ் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது என் அம்மாவின் கனவாகவே இருந்தது. இதற்காக, மாசம் ஒரு படத்திற்கு அழைத்து செல்வார்கள் என்றார்.

அதன் பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என் அம்மா கொலை செய்யப்பட்டு விட்டார். பள்ளி பருவத்திலேயே சுடுகாட்டுக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கு யாருடைய ஆதரவும் இல்லாமல் அலைந்தேன் என்று கதறி அழுதார்.
அஷ்ரப் என்பவர் நான் என்னை தன் மகன் போல கவனித்து வருகிறார்.
எனக்கு சிறு வயதிலிருந்தே ஆர்மியில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்தது இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு பாதுகாப்புத்துறைக்கு படித்தேன் ஆனால் என்னால் தேர்வாக முடியவில்லை. சரி அம்மாவின் ஆசையை நிறைவேற்ற டான்ஸ் மாஸ்டராகி இருக்கிறேன் என்று கூறினார்.