கதறிய பிரியங்கா! நிரூப்புடன் வெடித்த சண்டை (Live)
பிக்பாஸ் வீட்டில் இரண்டு அணிகளாக ஹவுஸ்மேட்ஸ் பிரிந்து, சக போட்டியாளர்களின் உண்மை முகத்தை மக்கள் முன் வெளிக்கொண்டு வரும் உத்தியாக டிவி டிபேட் டாஸ்க்கில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பிரியங்காவின் உண்மை முகம் வெளி வர ஆரம்பித்துள்ளது.
திடீரென ஆத்திரத்தில் மிகவும் மோசமாக சண்டை போடுகிறார்.
அடுத்த நொடியே கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். இதனால், போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லாமல் நம்மையும் முகம் சுளிக்க வைக்கிறது.
இன்றையய எபிசோடில் தாமரை பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த பிரியங்கா , தாமரை உனக்கு சமைப்பது மட்டும் தான் வேலை நீ ஏன் பாத்திரம் கழுவுற என்று கேட்டார்.
இதற்கு தாமரை தூக்கம் வரவில்லை அதான் நான் பாத்திரம் கழுவுகிறேன் என்றார். இதற்கு, பிரியங்கா, நீ பாத்திரம் கழுவதான் இங்கே வந்தியா..? நீ பாத்திரம் கழுவினால் மக்கள் உனக்கு வோட் போட்டு ஜெயிக்க வைக்க மாட்டாங்க .
இந்த வேலையை பாத்திரம் கழுவும் டீம் செய்ய வேண்டிய வேலை அவங்களை செய்ய சொல் என்று கத்துகிறார். மேலும் , தாமரை வேலை செய்துக்கிட்டே இருக்கானு கூறுகிறார்.
இதைப்பார்த்த நெட்டிசன்ஸ், ஆடு நனைகிறதேனு ஓநாய் கவலைப்பட்டதாம் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதேபோல், தாமரை மற்றும் வருணைக் கொண்டு நடத்தப்பட்ட டிபேட்டில் தாமரைக்கு சிபி சலுகைகள் வழங்க, இதனைத் தொடர்ந்து எடுத்து தாமரை சிபியை கொஞ்சுவது பிரியங்கா கிண்டல் அடிக்கும் தொனியில் பேசியதாக தாமரை சண்டை போட தொடங்கினார். பின்னர் அது பிராங்க் என அபிஷேக், சிபி, பிரியங்கா மூவரும் கூறினர்.
எனினும் தாமரை சமாதானம் ஆகவில்லை.
இதனைத் தொடர்ந்து பிரியங்கா மற்றும் நிரூப் இருவரிடையே வார்த்தை போர் அதிகரித்தது, அதன் தொடர்ச்சியாக நிரூப், “நீங்களே எல்லாத்தையும் பண்ணிடுவீங்க.. கிழிச்சிடுவீங்க..” என்று பேசியதும், “அப்போ உன் வாய்ல என்ன ஃபீடிங் பாட்டில் வெச்சிருந்தாங்களா? வாயை திறந்து சொல்ல வேண்டியதுதானே?” என்று பிரியங்கா நிரூப்பிடம் கேட்டார்.
பின்னர், அன்று தான் பேசியது தொடர்பான குறும்படத்தை பிக்பாஸிடம் கேட்டிருப்பதாகவும், அதற்காக தான் காத்திருப்பதாகவும் பேசிய பிரியங்கா, “வெளிய போனு சொன்னா நான் கெளம்பி போய்டுவேண்டா!” என்று நிரூப்பிடம் கூறினார்.