பிக் பாஸில் டைவர்ஸ் ரகசியத்தை உடைத்த விஜே அபிஷேக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக நுழைந்திருக்கும் விஜே அபிஷேக் தனக்கு டைவர்ஸ் ஆகிவிட்டது என கூறி இருக்கிறார்.
பிரபல youtuber மற்றும் தொகுப்பாளர் அபிஷேக் ராஜா தற்போது பிக் பாஸ் 5ல் போட்டியாளராக வந்திருக்கிறார்.
பிறந்தநாளில் அவர் பிக் பாஸ் சென்று இருப்பதை பற்றி இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்தி இருந்தார்.
இன்னும் 100 நாட்களுக்கு உன்னை நேரில் பார்க்காமல் இருக்க வாழ்த்துக்கள் என கூறி இருந்தார்.
இந்நிலையில் பிக் பாஸில் ஒரு முக்கிய உண்மையை கூறி இருக்கிறார் அபிஷேக். தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என அவர் தெரிவித்து உள்ளார்.
யாருக்கெல்லாம் திருமணம் ஆகிவிட்டது என பெண் போட்டியாளர் ஒருவர் கேட்க 'ராஜுவுக்கு திருமணம் ஆகிவிட்டது, எனக்கு டைவர்ஸ் ஆகிவிட்டது, அபினைக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது' என அபிஷேக் ராஜா கூறி இருக்கிறார். அபிஷேக் ராஜாவின் சொந்த வாழ்க்கை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த விஷயம் ஷாக் கொடுத்து இருக்கிறது.