தாமரையிடம் காயினை திருடிய சுருதி - இரண்டு பேரை கதற விட்ட தருணம்! கண்ணீர் வடித்த பாவனி
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், கடந்த தினத்தில், அபிஷேக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேற்றப்பட்டார்.
தற்போது போட்டியாளர்களுக்கு நாணயம் கடத்தல் டாஸ்க் மிகவும் சுவாரஸ்யத்தை எட்டியுள்ளது. வீட்டில் ஐந்து நாணயங்கள் வைக்கப்பட்டு அதைப் பாதுகாப்பது ஒரு குழுவின் கடமை என்றும், மற்றொரு குழு அதைத் திருடி கேமரா முன்பு காட்ட வேண்டும் என்பதே போட்டி.
இதனால், அதில் அதிக நாணங்களை வைத்திருப்பவர்களே இந்த வார நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என பிக்பாஸ் கூறியுள்ளது.
இதனால் போட்டியாளர்கள் தப்பிக்க மும்முரமாக இருப்பதால், இன்றைய நிகழ்ச்சியில் தாமரை குளிக்க சென்ற பின், பாவனி சொல்லி ஸ்ருதி திருடியதாக தாமரை பயங்கரமாக திட்டி கண்ணீர் விட்டுள்ளார்.
அதற்கு சுருதியும், பாவனியும் சண்டையிட்டு இருவரும் கண்ணீர் விட்டு அழும் காட்சியானது வெளியாகி இருக்கிறது. இன்றைய நிகழ்ச்சியில் எப்படியும் பொழுது போகும் என்பதில் சந்தேகமே இல்லை.