பிக்பாஸ் வீட்டில் இருந்து நாமினேட் ஆன போட்டியாளர்கள்.. கத்தி கதறிய பிரியங்கா!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நகைச்சுவை குறைவில்லாமல் இருப்பதால் ஆடியன்ஸ் பெரும்பாலானோர் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், நமீதா மாரிமுத்து சக போட்டியாளரான தாமரையுடன் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் தூக்கி எரிந்ததால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாக செய்திகள் கூறுகிறது.
மேலும் நமீதா வெளியேறியதை அடுத்து, யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தற்போது வெளியான ப்ரோமோவில், போட்டியாளர்கள் நாமினேட் செய்ததில், நாதியா, நிரூவ், இமான் அண்ணாச்சி, இசைவாணி, பிரியங்கா, அபினய், அபிஷேக், அக்ஷரா என இவர்கள் நாமினேட் ஆகியுள்ளனர். இதையடுத்து பிரியங்கா கொழுத்திப்போடு என கத்தி தன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.