பிரியங்காவை அதிரடியாக கமல் முன்பே எச்சரித்த தாமரை.... கிழிந்தது முகத்திரை!
பிக்பாஸ் சீசன் 5 ன் 48 வது நாளான நேற்று கண்ணாடி டாஸ்க் பற்றி கமல் பேசினார்.
அப்போது நிரூப், தாமரை சரியாக விளையாடினார்கள் என கமல் பாராட்டினார். கமல் பாராட்டியதால் குஷியான தாமரை, இந்த புள்ள இடத்துல நான் இருந்தால் வேறு மாதிரி பேசி இருப்பேன் என்றார். உடனே கமலும், நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்.
நடித்து காட்டுங்கள் தாமரை என்றார். பிரியங்காவின் கண்ணாடியாக மாறி பேசிய தாமரை, உன்னிடம் பாசமாக பேசுவதாக சிலர் நடிக்கிறார்கள்.
நீ உண்மையாக பாசம் வைத்து பழகுகிறவர்கள் எல்லோரும் உன்னிடம் உண்மையான பாசத்துடன் இல்லை.
பெண்கள் எல்லாவற்றிலும் விளையாட்டாக இருக்கக் கூடாது. ஆனால் தாமரை உனக்காக உயிரைக் கூட கொடுப்பாள் என்கிறார். மிக சுவாரஸ்யமாக, நிரூப்பை பற்றி பிரியங்காவிடம் எச்சரித்து வந்தார் தாமரை.
பிறகு பேசிய நிரூப் பிரியங்கா தன்னை வைத்து பக்காவாக கேம் ஆடுகிறாரோ என்கிற சந்தேகம் தனக்கு இருப்பதாக கமல் முன்பாகவே நிரூப் போட்டு உடைத்து விட்டார்
.
இதனால் நிரூப்பின் முகத்திரை கிழிந்து விட்டது. இனியாவது பிரியங்கா எச்சரிக்கையாக இருப்பாரா என்று பார்ப்போம்.