முதல் நாள்.. கமல் பாடலை போட்டு அசத்திய பிக்பாஸ்!
பிக்பாஸ் வீட்டில் முதல் பாடலாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசனின் பாடல் ஒளிபரப்பட்டது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 4 சீசன்களை போலவே உற்சாகமாக தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வீட்டில் தான் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் வீடு கொஞ்சம் பெரிதாக இருப்பது போன்று தெரிகிறது. மற்றப்படி வேறு எந்த மாற்றமும் இதுவரை இல்லை.
கடந்த சீசன்களில் ஹவுஸ் மேட்டுகளை எழுப்ப பாடல்கள் ப்ளே செய்யப்படும் அதை போன்றே இந்த சீசனிலும் பாடல்கள் ஒளிபரப்பப்படுகிறது. கடந்த சீசன்களில் பாடல் போடப்பட்டதும் போட்டியாளர்கள் முகத்தைக் கூட கழுவாமல் எழுந்து வந்து ஆட்டம் போடுவார்கள்.
ஆனால் இந்த சீசனில் பிக்பாஸுக்கு முன்பே போட்டியாளர்கள் எழுந்து ரெஃபிரஷ் ஆகியுள்ளனர். முதல் நாள் என்பதால் இப்படியா அல்லது போக போக மாறிவிடுவார்களாக என்பது வரும் நாட்கள் தெரிந்து விடும்.
முதல் நாளான இன்று கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் பாடல் ஒளிபரப்பப்பட்டது.
பாடலை கேட்டதும் எப்போடா பாட்டுப் போடுவார்கள் என காத்திருந்ததை போல் ஆட்டம் போட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் வைக்காமா போனாலும் பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான டிக்கிலோனா படத்தில் இப்பாடல் ரீமேக் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.