Bigg Boss 10: டிடிஎஃப் வாசனுக்காக வினோத் வடித்த கண்ணீர்... நெகிழ்ச்சி காட்சி
Vinoth Crying TTF Vasan Friendship: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் தங்களது பாசத்தினை வெளிக்காட்டி கண்ணீர் சிந்தியுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் விளையாடிவரும் நிலையில், கடந்த வாரம் அஸ்மிதா, அக்ஷிதா இருவர் வெளியேற்றப்பட்டனர்.
சீசன் ஆரம்பித்து தற்போது 75 நாட்கள் கடந்து செல்லும் நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் மிகவும் வித்தியாசமான டாஸ்க்கினை கொடுத்துள்ளார். அதாவது கடந்த 9 ஆண்டுகளாக இல்லாத புதிய டாஸ்க்காக உள்ளது.
அது என்னவெனில் பிக்பாஸில் ஒலித்துக் கொண்டிருந்த கம்பீர குரல் இல்லாமல் தற்போது பிக்பாஸ் வீடு சென்று கொண்டிருக்கின்றது. அந்த குரல் மட்டும் தான் இல்லை ஆனால் அதிகாரம் இருந்து வருகின்றது.
இந்நிலையில் ஜுனியர் பாஸாக வினோத், முனியம்மா என்று இருந்து வந்த நிலையில், தற்போது அன்சர் இருந்து வருகின்றார்.
இதில் முனியம்மா தன்னால் இதனை செய்யமுடியாத என்னை வீட்டைவிட்டு அனுப்பிவிடுங்கள் என்று கூறி கண்கலங்கினார்.

புதிய டாஸ்க்
தமிழ் சினிமாவில் கார்த்தி, நடித்த மெய்யழகன் படம் அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட பிரபலமான திரைப்படமாகும். இப்படத்தின் சைக்கிள் சீனை தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதில் முனியம்மா ஜேசனை தெரிவு செய்தார். அவினாஷ் ஜேசனையும், ஷாந்திகா முகேஸையும், தன்யா டிடிஎஃப் ஐயும், வினோத் டிடிஎஃப்-யும் தெரிவு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் டிடிஎஃப் குறித்து வினோத் பேசியதுடன் கடைசியில் கண்கலங்கி அழுதுள்ளார். மேலும் அவரைக் குறித்து பல விஷயத்தினை கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட ஜுனியர் பிக்பாஸ் அன்சரும் கண்ணீர் சிந்தியுள்ளார். ஆக மொத்தம் இந்த வாரம் பிக்பாஸ் இல்லாமலேயே ஜுனியர் பிக்பாஸை வைத்து நாட்களைக் கடத்தியுள்ளனர்.
இந்த வாரம் விஜய் சேதுபதியிடம் ஷாந்திகா, ஜேசன் இவர்கள் சரியாக பேச்சு வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் சரியாக சென்று கொண்டிருந்த வினோத்தை பதவியில் இருந்து இறக்கினார்கள்.
அதுமட்டுமின்றி அன்சரையும் இறக்குவதற்கு ஷாந்திகா அதிக முயற்சி எடுத்தார். ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |