Bigg Boss 10: நீங்கள் இந்த வீட்டுக்கு தேவையில்லை... வெளியேறிய போட்டியாளர்கள் யார்?
VJS Roast Jasan: பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கடந்த வார நிகழ்வுகளைக் கொண்டு அனைத்து போட்டியாளர்களை கடுமையாக விளாசியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 19 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர்.
பின்பு சில போட்டியாளர்கள் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றனர். இந்நிலையில் தற்போது 75 நாட்களைக் கடந்த நிலையில், 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
கடந்த வாரம் பிக்பாஸ் குரல் இல்லாமல் டாஸ்க் கொண்டு செல்லப்பட்டது. ஜுனியர் பிக்பாஸாக பிக்பாஸ் போட்டியாளர்கள் மாறி மாறி இருந்து வந்தனர்.
நேற்றைய தினம் அன்சரை ஜுனியர் பிக்பாஸிலிருந்து கீழே இறக்குவதற்கு ஷாதிகா போட்ட நாடகத்தினை எடுத்து கடுமையாக விஜய் சேதுபதி விளாசியுள்ளார்.
அப்பொழுது தனது ரியாக்ஷன் மூலமாக கடுப்பேற்றிய ஜேசனையும் கண்டித்தார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியில் விஜய்சேதுபதி கடுமையாக கோபப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்றும் ஜேசன் விஜய் சேதுபதியை மதிக்காமல் ஓவராக நக்கல் செய்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி நீங்கள் வீட்டிற்குள் இருக்க தேவையில் என்று கூறினார்.
மீண்டும் மற்றொரு ப்ரொமோ காட்சியில் ஜேசன் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு என்ன பதில் விஜய்சேதுபதி கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |