Bigg Boss 10: உனக்கும் ஷாதிகாவிற்கும் காதலா? முனியம்மாவின் பகீர் கேள்வி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஓபன் நாமினேஷன் நடைபெற்ற நிலையில், பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினை வைத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், நேற்றைய தினத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
நேற்று அஷ்மிதா வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ஷமா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் இன்று பிக் பாஸ் ஓபன் நாமினேஷன் வைத்துள்ளார். இதில் 15 போட்டியாளர்களும் நாமினேஷனுக்கு வந்துள்ளனர். பிக் பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினையும் வைத்துள்ளார்.
மற்ற போட்டியாளர்களிடம் வெளிப்படையாக கேள்வி கேட்பது என்ற டாஸ்க் ஆகும். இதில் முனியம்மா முகேஷிடம் ஷாதிகாவிற்கும், உனக்கும் காதலா? என்ற கேள்வியினை முன்வைத்துள்ளார்.
முனியம்மாவின் இந்த கேள்வி ஒட்டுமொத்த போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் எதிர்பார்ப்பில் எகிற வைத்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |