Bigg Boss 10: பிக்பாஸ் இல்லாமல் திணறும் குடும்பம்! ஜுனியர் பாஸிற்கு நெருக்கடி
Junior Boss Change: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ் குரல் இல்லாமல் அதிகாரம் மட்டும் இருக்கும் நிலையில், பிக்பாஸ் வீடு ரணகளமாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், பின்பு வைல்டு கார்டு போட்டியாளர்களும் வந்திருந்தனர்.
தற்போது 70 நாட்களைக் கடந்து செல்லும் நிலையில் போட்டியாளர்கள் விளையாட்டினை பயங்கரமாக விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து அஸ்மிதா, அக்ஷிதா இருவர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் 12 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். ஆனால் இந்த வாரம் பிக்பாஸ் குரல் வீட்டில் ஒலிக்காமல் போட்டியாளர்களே ஜுனியர் பாஸாக மாறி பிக்பாஸ் வீட்டை நடத்தி வருகின்றனர்.
ஜுனியர் பிக்பாஸாக வினோத் இருந்து வரும் நிலையில், அவரை அந்த இடத்திலிருந்து தூக்குவதற்கு போட்டியாளர்கள் பலரும் திட்டம் தீட்டி வருகின்றனர்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்திய ஜேசன் தான் வாக்கு அளிப்பதாகவும், ஆனால் தன்னை ஒருநாள் ஜுனியர் பிக்பாஸாக மாற்ற வேண்டும் என்று போட்டியாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு சம்மதிக்காத முனியம்மா ஜேசனிடம் நேருக்கு நேர் மோதி தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். மற்றொரு ப்ரொமோ காட்சியில் பாஸை தெரிவு செய்ய வாக்குபதிவு நடைபெற்றது. ஆனால் இதில் தன்யா தான் வாக்களிக்கமாட்டேன் என்று கூறினார்.
ஆதலால் தற்போதும் வினோத் ஜுனியர் பாஸாக செயல்பட்டு வருகின்றார். திடீரென தன்யா மற்றும் முகேஷ் இடையில் திடீர் சண்டை எழுந்துள்ளது. முகேஷை தான் தெரியாமல் இடித்துவிட்டதாக தன்யா கூறியுள்ளார்.
ஆனால் இதனை காதில் வாங்கிக் கொள்ளாத முகேஸ் ஆண் போட்டியாளர்களிடம் சண்டை போடுவது போன்று தன்யாவை இடித்து பயங்கரமாக சண்டை போடுகின்றார்.
பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் மற்ற போட்டியாளர்கள் முகேஷையும், தன்யாவையும் சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்தனர். ஆனாலும் அதையும் எகிறிக்கொண்டு சண்டை போடுகின்றனர். ஆனால் இந்த சண்டை டாஸ்க்கிற்கு நடக்கும் நாடகமா? என்ற கேள்வியையும் பார்வையாளர்கள் முன் வைக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |