Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோவில் வைரத்தை வைத்து இன்று புதிய டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், இரண்டு நாமினேஷன் ப்ரீ டிக்கெட்டினை காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து வந்த ஷமா, ஜய்சன் இருவரும் வென்றுள்ளனர்.
வீட்டில் எதிர்கட்சி தலைவராக கடந்த வாரம் முனியம்மா இருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்த வாரம் வீட்டில் தலைவராக அன்சர் இருக்கும் நிலையில், புதிய டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ளார். இதில் வீட்டின் நடுவில் வைரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து டாஸ்க் தொடங்கும் நிலையில், டிடிஎஃப் வாசன் வைரத்தினை எடுத்து பதுக்கி வைப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. இதற்காக அவர் பாத்ரூமில் இடம் ஒன்றினை தெரிவு செய்துள்ளார். மற்றொரு புறம் டான்ஸ் டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடைவெளியில் தான் டிடிஎஃப் வாசன் இந்த செயலை செய்துள்ளார். குறித்த புதிய டாஸ்க்கை அவதானிக்க மக்கள் இன்னும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |