அளப்பறையோடு வந்த பிரியங்காவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய கமல் ! துள்ளி குதித்து மகிழ்ச்சியுடன் கொடுத்த என்றி
கடந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் தொகுப்பாளினி அர்ச்சனா போட்டியாளராக வந்தது போல், இந்த முறை விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளை மிகவும் காமெடியாக தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான, பிரியங்கா கலந்து கொண்டுள்ளார்.
பிரியங்காவை பொறுத்தவரை, ஒரு தொகுப்பாளினியாக வாய்ப்பை பெற பல்வேறு கஷ்டங்களை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்தவர்.
தந்தையை இழந்த பின், இவரை மிகவும் தைரியமான பெண்ணாக வளர்த்தவர் பிரியங்காவின் அம்மா தான்.
கடந்து வந்த பாதைகள் குறித்த ஒரு சிறு அறிமுகத்திற்கு பின், பிக்பாஸ் சீசன் 5 வீட்டிற்குள் 6 ஆவது போட்டியாளராக, அதுவும் அர்ச்சனா போல் அலப்பறை செய்து கொண்டே பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார் பிரியங்கா.
அது மட்டும் இல்லை.. கமலுடன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை என கூறினார். உடனே கமல் அதற்கான வாய்பை வழங்கி பிக் பாஸ் சீசன் 5 என்று கூற சொல்லுகின்றார்.
உடனே துள்ளி குதித்து மகிழ்ச்சியுடன் அவர் பிக் பாஸ் வீ்ட்டிற்கு செல்லுகின்றார்.