இலங்கை போட்டியாளரை இறுதியாக எச்சரித்த பிக்பாஸ்: இவ்வாரம் வெளியேற்றப்படுவாரா?
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளரான ஏ.டி.கே வை பிக்பாஸ் இறுதியாக எச்சரித்துள்ளார்.
ஏ.டீ.கே
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 6ஆவது சீசனில் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பல துறைகளைச் சேர்ந்த 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.
இந்தப்போட்டியாளர்களில் ஏ.டி.கேயும் ஒருவர். உடல் வேலைகளில் பலம் இல்லாவிட்டாலும், தனது நுணுக்கமான யுக்திகளால் 80 நாட்களைக் கடந்தும் தற்போதுவரை வீட்டில் விளையாடி வருகின்றார்.
சக ஹவுஸ்மேட்களுடன் அவர் சண்டையிடுவதும், முக்கியமான காலங்களில் அவர் விவாதிப்பதும் நிகழ்ச்சியின் ரசிகர்களை அடிக்கடி மகிழ்வித்து வருகின்றார்.
இறுதி எச்சரிக்கை
இந்நிலையில், சீக்ரெட் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ் எச்சரித்துள்ளார்.
சிறுநீரகக்கல் பிரச்சனை காரணமாக அவரது உடல் நிலை மோசமாகி இருந்தது. இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புகைப்பிடிப்பதைக் குறைக்குமாறு கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, நேற்றும் பிக்பாஸ் அழைத்து எச்சரித்திருந்தார்.
அவர் தெரிவித்ததாவது,
மருத்துவர்கள் அறிவுரையை கேட்காமல் நீங்கள் புகைப்பிடிப்பது தெரிய வந்தால் உடனடியாக உங்களை இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்ப நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
Really appreciate #BiggBoss for doing this ?? #BiggBossTamil6 #ADK pic.twitter.com/EdYSMnpqWU
— Ajas (@AjasOnline) January 4, 2023