பிக்பாஸ் கிராண்ட் பினாலேவில் நுழைந்த முன்னாள் போட்டியாளர்.. இணையத்தில் கசிந்த வெற்றிகோப்பை புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 104 நாட்களை கடந்த நிலையில், இன்றுடன் கிராண்ட் பினாலே நடைப்பெற்று முடிவடைகிறது. இதையடுத்து, இன்றைய கிராண்ட் பினாலே நிகழ்ச்சியானது 6 மணிநேரம் நடைப்பெற இருக்கிறது. இந்நிலையில், இணையத்தில் புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. அதில், முன்னாள் பிக்பாஸ் வின்னரான முகேன் ராவ் வந்துள்ளது தெரிகிறது.
இந்த சீசனில் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வரும் அவர் சனம் ஷெட்டியிடம் டைட்டில் வின்னர் கோப்பையை காட்டும் புகைப்படமே கசிந்து விட்டது. மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகேன் ராவ் ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ், சோமசேகர் மற்றும் ஆரி என அனைவரது தனித் திறமைகளை பற்றியும் அடுக்கி பேசிவிட்டு, அவர்கள் வெற்றிப்பெற தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து வீடியோ போட்டது வைரலாகி வருகிறது.
இதனிடையே ஆரி தான் கோடிக்கணக்கான வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் தான் வெற்றியாளர் எனவும் தகவல்கள் கசிந்தன.
Old HM in Finale stage seeing the winner trophy #AariArjunan #BalajiMurugaDass #RamyaPandian #Rio #som
— BIG BOSS 4 Paridhabangal (@BBPFriends20) January 16, 2021
#BiggBossTamil4 #BiggBoss4Tamil #BiggBossTamil pic.twitter.com/ne687ovaof