அம்பலமானது பிக்பாஸ் வீட்டின் சூழ்ச்சிகள்: ஓட்டு போடுவதே வேஸ்ட்!
பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
முதல் சீசன் முதல் இன்று வரை சென்றுக் கொண்டிருக்கும் சீசன் 6 வரை சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் மக்களின் வாக்குகளின் படி குறைவான வாக்குகளைப் பெற்றவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
இந்த சீசன் 6இலும் அப்படி நடக்கின்றதா, இது எல்லாம் வெறும் வெளித்தோற்றத்திற்கு மாத்திரம் தான் ஆனால் உள்ளுக்குள் பெரும் சூழ்ச்சிகள் தான் நடக்கின்றது.
வெளியேற்றப்பட்ட தனலெட்சுமி
தொலைக்காட்சிகளுக்கு டிஆர்பி மாத்திரம் தான் முக்கியம். இதனால் அவர்களுக்கு ஏற்றாற்போல் தான் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களை வெளியேற்றி வருகிறார்கள்.
இதற்கு உதாரணமாகத்தான் இந்தவாரம் வெளியேற்றப்பட்டுள்ள தனலெட்சுமி. தனலெட்சுமி மனதிற்கு பட்டதை பேசிவிட்டு, சுறுசுறுப்பாக விளையாடி வந்தார்.
இவருக்கு பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மைனா மற்றும் ரக்சிதாவிற்கு ஆதரவு சற்று குறைாகவே காணப்படுகிறது.
வெளியேற்றுவதற்கான காரணம்
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து தனலெட்சுமி கொடுக்க வேண்டிய கன்கெட்டுக்களை கொடுத்துவிட்டார்.
அடுத்தவாரம் போட்டியாளர்களின் சொந்தங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார்கள். இதில் தனலெட்சுமியின் அம்மாவும் வருவார்கள்.
தனலெட்சுமியின் அம்மாவும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதனால் இவர்களால் டிஆர்பிக்கு எந்த பயனும் இல்லை.
இதை கருத்தில் கொண்டு தான் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளரை விட்டு விட்டு தனலட்சுமி பிக் பாஸ் வெளியேற்றியுள்ளனர்.