வெளியில் சென்றும் புரட்சி செய்ய தயார்- கண்கலங்கி சபதம் எடுக்கும் விக்ரமன்: ஊக்கப்படுத்தி வாழ்த்து சொல்லும் பிக்பாஸ்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் சென்றும் புரட்சி செய்யப்போவதாக விக்ரமன் தெரிவிக்க அதற்கு பிக்பாஸ் ஊக்கப்படுத்தியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 தற்போது 102 நாட்களை இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ளது. இந்த போட்டியில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த போட்டியாளர்கள் பிக்பாஸ் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அவ்வாறு வெளியேற்றப்பட்டு தற்போது 5 பேர் மாத்திரமே விளையாடி வருகிறார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்பதை இன்னும் சில தினங்களில் தெரியவரும் நிலையில் உள்ளது.
புரட்சியாளன்
பிக்பாஸ் போட்டியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையாக மேடைக்கு அழைத்து அவர்களை பாராட்டுவதுடன், வாழ்த்தவும் செய்கிறார் பிக் பாஸ்.
அந்த வகையில் விக்ரமனை பாராட்டிய ப்ரோமா காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதில், விக்ரமன் சகமனிதரை மதிக்க தெரிந்த தோழனை அடையாளம் காட்டியத்தில் எனக்கு மகிழ்ச்சி எனவும்
வெளியில் சென்று செய்யும் புரட்சிகளை காண தாம் ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ காட்சி வெளிவந்துள்ளது.