வாவ்… ஜித்தன் ரமேஷிற்கு இவ்வளவு பெரிய மகளா? நடிகைளையும் மிஞ்சிய அழகு...! கிரங்கி போன ரசிகர்கள் : தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜித்தன் ரமேஷ் அவரின் குடும்ப புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “ஜித்தன் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரமேஷ்.
ஆனால் அதற்கு பிறகு எந்த ஒரு வெற்றித் திரைப்படமும் அவருக்கு அமைய வில்லை. அந்த படத்திற்கு பின்னர் இவரை ஜித்தன் ரமேஷ் என்றே அழைத்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆனால், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அது மாத்திரம் இன்றி சமூகவலைத்தளத்தில் ரசிகர்களிடம் பிக்பாஸில் தனக்கு இத்தனை நாட்கள் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியிருந்தார்.
இந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் உங்கள் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிடுங்கள் என்று கேட்டிருந்தார்கள்.இப்படி ஒரு நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் .
குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதில் அவரின் மகளை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.