விக்ரமனுக்கு சப்போர்ட் செய்த திருமாவளவன்: வனிதா என்ன சொல்லியுள்ளார் பாருங்க
பிக்பாஸ் போட்டியாளரான விக்ரமனை ஜெயிக்க வைக்க அரசியல் கட்சித் தலைவர் திருமாவளவன் வாக்கு கேட்டு டுவிட் செய்ததற்கு வனிதா காட்டம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் டுவிட்
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் இறுதி சுற்று இந்த வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது விருப்பமான போட்டியாளர்களுக்கு வாக்களிப்பதற்காக நேரம் இப்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கட்சியை சேர்ந்த விக்ரமன் பிக்பாஸ் 6யின் டைட்டில் வின்னராக வேண்டுமெனவும், பிக்பாஸ் போட்டியில் விக்ரமனை வெற்றிபெற வைக்க அவருக்கு வாக்களியுங்கள் ட்விட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சரமாரியாக பேசிய வனிதா
இந்நிலையில், தொல்.திருமாவளவன் ட்விட் பதிவிற்கு முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் வனிதா பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்கேற்கும் போட்டியாளருக்கு ஒரு அரசியல் தலைவர் ஆதரவாக பேசுவது சரியா? என்று நடிகை வனிதா கேள்வி எழுப்பி உள்ளார்.
இதில் “மதிப்பு நிறைந்த இடத்தில் இருக்கும் ஒரு கட்சி தலைவர் மற்றும் எம்.பி எப்படி, பிக்பாஸ் போட்டியாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூற முடியும். இதை அரசியல் ஆதாயம் என்றுதான் அழைக்க வேண்டும்” என்று அவர் ட்விட் செய்துள்ளார்.
What do you say for this … its all a political stunt… how can a respected political leader and sitting MP influence his cadres to vote for a contestant in a reality show… https://t.co/8dnqcw2nIB
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) January 18, 2023