விளையாடிய குழந்தை அருகில் மின்னல் வேகத்தில் பாம்பு: என்ன செய்தது தெரியுமா? நடுநடுங்க வைக்கும் காணொளி
விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நோக்கி ராட்சத ராஜநாகம் ஒன்று வந்துள்ள தருணத்தில் மிகவும் சாமர்த்தியமாக குழந்தையை தந்தை காப்பாற்றிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியட்நாம் நாட்டில் நடைபெற்ற சம்பமே இதுவாகும். இதில் குழந்தை ஒன்று வீட்டின் முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருக்கின்றது.
அதன் அருகில் அவரது தாத்தாவும், சற்று தள்ளி அவரது தந்தை சேர் ஒன்றில் அமர்ந்திருக்கின்றார். இந்நிலையில் குழந்தையை நோக்கி 8 அடி நீளமுள்ள ராட்சத ராஜநாகம் ஒன்று வருவதை அவதானித்த தாத்தா சத்தம் போட ஓடி வந்த மகன் அவரது குழந்தையை காப்பாற்றியுள்ளார்.
வீட்டிற்குள் சென்று கதவை அடைத்த நிலையில், பாம்பு வீட்டிற்குள் செல்ல பல முயற்சியினை செய்து இறுதியில் வெளியேறியுள்ளது. இக்காட்சி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.