மறைந்த சித்ராவிற்கு வைக்கப்பட்டுள்ள பெரிய மண்டபம்... 3 மாதமாகியும் மறக்காமல் தவிக்கும் ரசிகர்களின் செயல்
பிரபல நடிகை சித்ரா கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி பிரபல நட்சத்திர ஹொட்டலில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்த அவர் இன்று நம்முடன் இல்லை. அந்த சீரியலை சித்ராவிற்காகவே பார்த்த ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம்.
தான் காதலித்து திருமணம் செய்த கணவரின் மோசமான செயல்களால் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதுடன், அவரது கணவரும் கடந்த மாதத்தில் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இப்போதும் சித்ராவின் ரசிகர்கள் அவரது வீடியோ, புகைப்படங்களை ஷேர் செய்த வண்ணம் உள்ளார்கள். தற்போது சித்ராவின் நினைவாக ஒரு பெரிய மண்டபம் ஒன்று வைத்துள்ளனர். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.