அம்மாடியோவ்... உலகின் மிகப்பெரிய Gold Fish! வைரலாகும் புகைப்படங்கள்
பிரான்சில் பிடிபட்ட 30 கிலோ எடை கொண்ட Gold Fishன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் Gold Fish வளர்ப்பதை பார்த்திருப்போம், சிறியதாக கண்ணை கவரும் வண்ணத்தில் அழகாக இருக்கும்.
ஆனால் கிட்டத்தட்ட மனிதரின் உயரத்துக்கு Gold Fish கிடைத்தது என்றால் நம்பமுடிகிறதா?
ஆம், பிரான்சின் Bluewater ஏரியில் 30 கிலோ எடைகொண்ட Gold Fishயை பிடித்துள்ளார் 42 வயதான Andy Hackett.
உலகிலேயே மிக பெரிதான Gold Fish இதுவாகும், இதற்கு முன்னதாக அமெரிக்காவில் 2019ம் ஆண்டு பிடிக்கப்பட்ட Gold Fishன் எடை 13 கிலோவாக இருந்தது.
ஏரியில் மீனை பார்த்ததும், சுமார் 25 நிமிடங்கள் அதை துரத்தி சென்று பிடித்ததாக தெரிவிக்கிறார் பிரித்தானிய மீனவரான Andy Hackett, இந்த மீனுக்கு செல்லமாக Carrot என பெயரிட பேஸ்புக்கில் வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.