பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது – பரபரப்பை ஏற்படுத்திய புகார்!
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வர்ஷினி வெங்கட் பங்கேற்றார்.

வர்ஷினி வெங்கட்
பிக் பாஸ் வீட்டில் சுமார் மூன்று வாரங்கள் மட்டுமே இருந்த அவர், தனது கலகலப்பான செயல்பாடுகளால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
எலிமினேஷனுக்குப் பிறகும் சிரித்த முகத்துடன் வெளியேறிய வர்ஷினி, பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக விஜய் சேதுபதியிடம் தெரிவித்திருந்தார்.

பிக் பாஸுக்குப் பிறகு சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் நடித்த அவர், தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். அண்மையில் அரசியல் தொடர்பான தனது சமூக வலைதளப் பதிவுகள் மூலமாகவும் அவர் கவனம் பெற்றிருந்தார்.
பண மோசடி புகார்
இந்த நிலையில், குறும்படம் தயாரிப்பதற்காக முதலீடு செய்யுமாறு கூறி தன்னை ஏமாற்றியதாக ஒருவர் வர்ஷினி வெங்கட்டுக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ந்தப் புகாரில், பணத்தை திருப்பிக் கேட்டபோது கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தன்னைப் பேச அழைத்து தாக்கியதுடன், இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொலைபேசி மூலம் மிரட்டி வங்கி பரிவர்த்தனை வழியாக ரூ.5 லட்சம் பெற்றதாகவும், தொடர்ந்து ரூ.27 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.பணம் வழங்காவிட்டால் பொய் வழக்குப் பதிவு செய்வதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வர்ஷினி வெங்கட், சஞ்சய் உள்ளிட்ட நான்கு பேர் மீது கிண்டி போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |