10 நாட்களுக்கு முன்னரே இறப்பை தெரிந்து கொண்ட பவதாரணி.. வேதனையில் மறைக்கப்பட்ட உண்மை
தான் இறக்கப் போவதாக 10 நாட்களுக்கு முன்னரே பவதாரணி தெரிந்து கொண்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பவதாரணி
தமிழ் சினிமாவின் பிரபல பாடகிகளில் ஒருவர் தான் பவதாரணி, இவர் இளையராஜாவின் மகளும் யுவன் சங்கர் ராஜாவின் அன்பு அக்காவும் ஆவார்.
தேசிய விருதை கைவசமாக வைத்திருக்கும் பவதாரணி 30ற்கு மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். அத்துடன் 10 ற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரணி இலங்கை -கொழும்பு வைத்தியசாலையில் ஆயுள் வேத சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
மரணத்தை தெரிந்து கொண்டாரா பவதாரணி?
இந்த நிலையில் பாடகி பவதாரணி தான் இன்னும் 10 நாட்களில் இறக்க போவதாக தெரிந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
அதாவது, “ நோய் தீவிரமடைந்த நிலையில் மனமுடைந்திருந்த பவதாரணி, இலங்கையில் இருக்கும் ஆயுள் வேத சிகிச்சையை நம்பி எப்படியாவது பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு வந்தார்.
பவதாரணியின் உடல் நிலை கடந்த 10 நாட்களுக்கு முன்னரே மோசமடைந்ததை கண்டறிந்த மருத்துவர்கள் கைவிரித்து விட்டனராம். இருந்தாலும் முயற்சி செய்யலாம் என மருத்துவர்கள் கடுமையாக முயற்சி செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
ஆனால் கடைசி வரை பவதாரணி பிழைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு தான் இருந்தார் எனவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், குறித்த செய்தியை பார்த்து ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |