பவதாரணி இறுதிசடங்கில் மகளின் பாடலை பாடி வழியனுப்பிய இளையராஜா
மகள் பவதாரணியின் இறுதிசடங்கில் இளையராஜா மற்றும் குடும்பத்தினர் மயில் போல பொண்ணு என்ற பாடலைப் பாடி அவரை வழியனுப்பி வைத்துள்ளனர்.
பாடகி பவதாரணி
பிரபல இசையமைப்பாளரின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி(47) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் தனது கணவருடன் இலங்கையில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வந்து அதற்கான ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி சென்ற நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், இவரது உடல் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறுதி சடங்கில் பாடிய பாடல்
கடந்த 2000ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது.
இன்று தேனி மாவட்டத்தில் இளையராஜாவின் அம்மா மற்றும் மனைவியை நல்லடக்கம் செய்து அங்கு மணிமண்டமும் கட்டப்பட்டுள்ளது.
பவதாரணியின் நல்லடக்கத்தில் பல பிரபலங்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். விமானம் மூலம் மதுரை வந்த இளையராஜா பின்பு காரில் இன்று பிற்பகலில் லோயர்கேம்ப் வந்தார். இறுக்கத்துடன் மனவேதனையில் இருந்த இளையராஜாவுக்கு பாரதிராஜா ஆறுதல் கூறினார்.
இறுதிசடங்கில் பவதாரணியின் உடலை தூக்கியபடி, அவரின் தேசிய விருது பெற்ற பாடலான மயில் போல பொண்ணு ஒன்று... கிளிபோல பேச்சு ஒன்னு... என்ற பாடல் பாடி மகளை கனத்த இருதயத்துடன் வழியனுப்பி வைத்துள்ளனர்.
பவதாரணி நல்லடக்கம் செய்த இடத்திலும் விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |