திருமண மேடையில் அப்பாவிடம் பவதாரிணி கேட்ட அந்த பாடல்.., பாட மறுத்த இளையராஜா
பிரபல பாடகி பவதாரிணியின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அவர் குறித்து பல நினைவுகளை அவரின் உறவினர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
பவதாரிணியின் மறைவு
சினிமா துறையில் தற்போது எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்த மரணங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.
அந்தவகையில், பிரபல பாடகியும், இளையராஜாவின் மகளுமான பவதாரிணியின் மரணம் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் பவதாரிணி குறித்த நினைவுகளை அவருடைய உறவினர்களும் நண்பர்களும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், பவதாரிணி குறித்து அவருடைய கணவரின் அண்ணன் பேட்டி ஒன்றில் சில தகவல்களை பேசி இருக்கிறார்.
அவர் கூறியதாவது..,
"பவதாரிணியின் திருமண நாளில் நடந்த நிகழ்வு மட்டும் எங்களால் மறக்கவே முடியாது.
திருமண மேடையில் பவதாரிணி இருக்கும்போது, அவருடைய அப்பாவான இளையராஜாவிடம் எனக்காக "ஜெகம் நீ ஜனனி"என்ற பாடலை பாடுங்கள் என்று பவதாரிணி கேட்டார்.
ஆனால் அதற்கு இளையராஜா பாட மறுத்துவிட்டார். நான் இந்த பாடலை பாடினா, நீ அழுதுடுவேன்னு சொன்னார். ஆனால் பவதாரிணி கேட்காமல் அடம்பிடித்தார்.
பிறகு இளையராஜா "ஜனனி ஜகம் நீ" என்ற பாடலை பாடினார். ஆனால் கடைசியில் அவர் சொன்னது போலவே பவதாரணி அழுதுவிட்டார்.
அப்போது செல்லமாக இளையராஜா கோபித்துக் கொண்டு இதற்காக தான் நான் கூறினேன்.., சந்தோஷமான நேரத்தில் அழக்கூடாது என்பதற்காக சொன்னேன் என்று அவர் தன்னுடைய மகளை தேற்றிக் கொண்டிருந்தார்.
அந்த நினைவுகள் எங்களுக்கு இப்போதும் மறக்கவில்லை'' என்று அவர் கூறியிருக்கிறார்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |