டயட்டில் இருப்பதாக கூறி உறவினர்களை சமாளித்த பவதாரணி... பிரபல நடிகை உடைத்த உண்மை
பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாடகி பவதாரணி சிகிச்சை மரணமடைந்த நிலையில், தனது உறவினர்களிடம் டயட்டில் இருப்பதாக கூறி சமாளித்துள்ளது தெரியவந்துள்ளது.
பாடகி பவதாரணி
பிரபல இசையமைப்பாளரின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி(47) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது கணவருடன் இலங்கையில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் உயிரிழந்த அவரது உடலை நேற்று மாலை சென்னை கொண்டு வந்துள்ளனர்.
இவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடியுள்ளதுடன், இவர் பாடிய பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உறவினர் விலாசினி கூறிய உண்மை
சில சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை விலாசினி. இவர் பவதாரணியின் தாய் மாமாவின் மகள் ஆவார். இவர் கூறுகையில், "பவதாரணியும் நானும் ரொம்பவே நெருக்கமானவர்கள்.
ஒருமுறை இளையராஜாவிற்கு போன் செய்து மாமா எங்கு இருக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு உடனே அவர் அழுதுகொண்டு உனது அக்காவை ஒருமுறை வந்து பார்த்துவிட்டு போ.. அவருக்கு கேன்சர் நான்காவது ஸ்டோச் என்று கூறியுள்ளாராம்.
ஆனால் மருத்துவர்கள் கூறிய போது பவதாரணியிடம் சொல்ல வேண்டாம் என்று குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இளையராஜாவும் பவதாரணியின் மருத்துவ ரிப்போட்டை வாங்கி உறவினர் மருததுவரிடம் காட்டியுள்ளார். அதற்கு அவர் ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள்... என்று கூறியது எங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
கடந்த வருடம் கொலு நிகழ்ச்சிக்கு சென்ற போது பவதாரணி மிகவும் மெலிந்து காணப்பட்டார். அப்பொழுது கொஞ்ச நாள் வாழ்வதற்கு எதாவது முயற்சி செய்வோம் என்று நினைத்த போது, பவதாரணியின் உடலை தேற்றிக்கொண்டு வருமாறும், அவர் சிகிச்சையை தாங்க மாட்டார் என்று கூறியுள்ளார்களாம்.
முன்பே வயறு வலி என்று கூறினார். அப்பொழுது பித்தப்பை பிரச்சினை என்பது தெரிந்தும், அதனை ஸ்டோன் என்று நினைத்து அசால்ட்டாக விட்டுவிட்டனரா என்பது தெரியவில்லை. உறவினர்கள் பவதாரணியிடம் உடல்நிலை மெலிந்து இருப்பதை கேட்ட போதும் டயட்டில் இருப்பதாகவே கூறி சமாளித்துள்ளதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |