எப்பொழுதும் எனக்காக இருப்பீர்களா? அமீரிடம் காதலை ஓபனாக கூறிய பாவனி!
பிக்பாஸ் நிகழ்ச்சி 5வது சீசன் மூலம் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி.
இந்த நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறியுள்ள இவர்கள், விஜய் டிவி பிபி ஜோடியின் இரண்டாவது சீசனில் டான்சராக பங்குபெற்ற அமீர் மற்றும் பாவனி டான்ஸ் போட்டியில் திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் கூட அரங்கேறியிருந்தது.
இதனிடையே, பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இருவரும் தற்போது வெற்றி கோப்பையை கைப்பற்றி இருக்கின்றனர்.
வெற்றி பெற்ற பின் இன்ஸ்டகிராமில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார் பாவனி.
அதில், தம் ஒப்பனையாளர்களுக்கு நன்றி சொன்ன பாவனி அமீர் குறித்து பேசும்போது, "அமீர் மாஸ்டர் டான்ஸ் ஆடுவது மிகப்பெரிய சவால்.
அதுவும் ஒரு போட்டியில் ஆடுவது எனக்கு மிகவும் பயம். ஆனால் நீங் கள் நல்ல மாஸ்டர் என்பதை நிரூபித்து விட்டீ ர்கள். சரிவர டான்ஸ் ஆட வராத என்னை வெற்றி பெறும் அளவிற்கு ஆட வைத்துள்ளீர்கள்.
இது மிகச் சிறப்பான பயணம். ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன். மேலும், உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.
நீங்கள் மிகச் சிறந்த மனி தர், மாஸ்டர், நல்ல நண்பர். நமது வாழ்க் கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம் என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த இணையராக இருங்கள்.
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். எப்பொழுதும் எனக்காக இருக்கிறீர்களா? எப்போதும் ஐ லவ் யூ" என பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அப்ப பொண்ணு ஓகே சொல்லியாச்சு என கொண்டாடி வருகின்றனர்.