ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்! ரூ. 6000 மதிப்புள்ள நன்மைகள் இலவசமாம்....
பண்டிகை காலம் நெருங்குவதை முன்னிட்டு இந்தியாவில் ஏராளமான விற்பனைகள் சிறப்புத் தள்ளுபடியுடன் நடைபெற துவங்கியுள்ளது. அதில் பல நிறுவனங்கள் ஆஃபர்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில், ஏர்டெல் நிறுவனமும் அதன் சலுகையைத் தனது பயனர்களுக்காக தற்போது அறிவித்துள்ளது. தற்போது அதன் பயனர்களுக்கு ரூ. 12,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை வாங்கும்போது ரூ .6,000 மதிப்புள்ள நன்மைகளை வழங்குகிறது.
மேலும், ஏர்டெல் பயனர்களுக்கு இந்த நன்மையை வழங்குவதற்காக முன்னணி பிராண்டுகளின் 150-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை அந் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
ஆனால், வாடிக்கையாளர் தனது தரப்பிலிருந்து சந்திக்க வேண்டிய சில நிபந்தனைகள் உள்ளன. சலுகை பொருந்தும் வகையில், புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர் ரூ .249 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள நிறுவனத்தில் ப்ரீபெய்ட் பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்த ரீசார்ஜ் 36 மாதங்கள் 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடக்க வேண்டும். இதனையடுத்து, பாரதி ஏர்டெல் 3 ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக ரூ. 6,000 நன்மையை உங்களுக்கு வழங்குகிறது. பாரதி ஏர்டெல் 36 மாத காலப் பகுதியில் சுமார் 6,000 ரூபாய் கேஷ்பேக் நன்மையை இரண்டு பகுதிகளாக வழங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் ரூ. 49,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 36 மாதங்கள் ரீசார்ஜ் செய்யும் காலத்தை முடித்தவுடன் பயனர்களுக்கு ரூ. 4,000 என்ற எஞ்சிய தொகை வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இதுமட்டுமின்றி, ஏர்டெல் ரூ. 4,800 மதிப்புள்ள இலவச டிஸ்பிளே மாற்று நன்மையையும் வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. ரூ. 12,000-க்கு கீழ் அல்லது அதற்கு மேல் விலை கொண்ட ஸ்மார்ட்போனுக்கு டிஸ்பிளேவை பெறுவதற்கான தோராயமான செலவு ரூ. 4,800 ஆகும்.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் சலுகை நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயை ஊக்குவிக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இந்த பட்டியலில் சாம்சங், சியோமி, விவோ, ஒப்போ, ரியல்மி, நோக்கியா, ஐடெல், லாவா, இன்பினிக்ஸ், டெக்னோ, லெனோவா மற்றும் மோட்டோரோலா போன்ற முன்னணி நிறுவனங்களின் சிறந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வாங்குவதற்கு கிடைக்கிறது.